இந்தியாவில் 5.9மில்லியன் டன் லித்தியம் கனிமம் கண்டுபிடிப்பு!!

 
லித்தியம்

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் விலையேறிக்கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவர்களின் துயர் தீர்க்க மின்சார வாகனங்கள் சாலைகளில் பெருக தொடங்கியுள்ளன. இதில் பல சவால்கள் உள்ள போதிலும் இன்னும் சில ஆண்டுகளில் முழுவதுமாக மின்சார வாகனங்கள் அணிவகுக்கலாம் என்பது பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மின்சார வாகனங்கள் இயங்குவதற்கு மின்சார பேட்டர்கள் அவசியம். மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் லித்தியம் கனிமம் அதிமுக்கியமான மூலப்பொருள் .

லித்தியம்

இரும்பு அல்லாத உலோகமான லித்தியம் செல்போன், லேப்டாப், டிஜிட்டல் கேமரா, மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியின் முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை லித்தியம் கனிமம் கண்டறியப்படவில்லை. தற்போதுவரை இந்தியா லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் ஒரு பகுதியான  இந்தியா புவியியல் ஆய்வு அமைப்பு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில்  கனிம வளங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.  

லித்தியம்

அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் 5.9 டன் லித்தியம் கனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்தியாவில் மிகப்பெரிய அளவில் லித்தியம் கனிம தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான மூலப்பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கலாம்.  லித்தியம் பேட்டரி இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  மின்சார வாகனங்கள், செல்போன், பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களிடையே இந்த தகவல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web