மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி 5ம் ஆண்டு நினைவேந்தல் !! தூத்துக்குடியில் நெகிழ்ச்சி!!

 
ஸ்டெர்லைட்

 தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். எதையும் நிர்வாகமும், அரசும் கண்டு கொள்ளாததால் 100வது நாள் பெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து சுமார் 1லட்சம் பேர் குவிந்தனர். இந்த போராட்டம் சிறிது நேரத்தில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் எத்தனையோ முயற்சித்தும் முடியவில்லை. இறுதியில் பயரிங் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதனால் போலீசார் பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!

இந்நிகழ்வு நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடியில் காற்றுமாசு படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள் உறுதிமொழி ஏற்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் மூட உத்தரவு!

இதனை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் மொத்தம் 2,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சிகள் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுவதை ஒட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தடுப்பு முறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் முழுவதும்  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  53 டாஸ்மாக் கடைகளும், பார்களையும் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web