பகீர் காட்சிகள் .... ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 ராணுவ விமானங்கள் முழுமையாக அழிப்பு... !

 
ஈரான்


 
 ஈரான் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட  தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஜூன் 13-ம் தேதி தொடங்கிய தாக்குதல்  10வது நாளாக தாக்குதல் தொடர்ந்து  வருகிறது.தற்போது, ஷாத், டெஸ்ஃபுல் மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள 6 ஈரானிய இராணுவ விமான நிலையங்கள் மீது ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 6 விமான நிலையங்களை தாக்கிய இஸ்ரேல் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் தி-14, தி-5 மற்றும் கிபி-1 விமானங்கள் சேதமடைந்துள்ளன.  இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகளை  இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF), ‘தொலைதூர ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி, 15 ஜெட் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் அழித்தன, அவற்றில் F-14கள், F-5கள் மற்றும் AH-1கள் அடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், விமானநிலையத்தின் ஓடுபாதை, சுரங்கப்பாதை, எரிபொருள் நிரப்ப பயன்படும் விமானமும் சேதமடைந்தது. இந்த விமானங்கள் இஸ்ரேலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை” எனக்  கூறியுள்ளன. 

ஈரான்
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஈரானின் திறனைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக கருதப்படுகிறது.  இலக்கு வைக்கப்பட்ட தளங்களில் பார்சின் மற்றும் தெஹ்ரான் விமானத் தளங்களும் அடங்கும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது