பகீர்... மருத்துவமனையில் ரத்த பரிமாற்றத்தில் அலட்சியம்… 6 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று....
மத்திய பிரதேசம் சத்னாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அரசு மருத்துவமனையில் தலசீமியா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 முதல் 15 வயதுக்குள் உள்ள இந்த குழந்தைகளுக்கு, எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதே காரணம் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் தற்போது மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவாலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ரத்த வங்கி பொறுப்பு அதிகாரி டாக்டர் தேவேந்திர படேல், லேப் டெக்னீசியன்கள் ராம் பாய் திரிபாதி, நந்த்லால் பாண்டே ஆகிய மூன்று பேரை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. குழந்தைகளின் உயிருடன் விளையாடிய இந்த அலட்சியம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
