அதிர்ச்சி.. தீவனம் சாப்பிட்ட அடுத்த நொடியே உயிரிழந்த 6 கறவை மாடுகள்..!!

 
மாடுகள்  உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பண்ணை நிலத்தில் கட்டி  வைக்கப்பட்டிருந்த அடுத்தடுத்து 6  கறவை மாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு... தீவனம் வைக்கப்பட்டதில் ஏதேனும் பிரச்சினையா? என  கால்நடை மருத்துவத் துறையினர் உடற்கூறாய்வு ..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் அஷ்பக் அஹமத் இவருக்கு பார்சனாப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கியாபல்லி பகுதியில்  உள்ள 6 ஏக்கர்  பண்ணை நிலத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பன்னை நிலத்தில் வேலை செய்து கறவை மாடுகளையும் பராமரித்து வந்துள்ளனர் .இந்த நிலையில் வழக்கம்போல் பன்னை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கறவை மாடுகளுக்கு தீவனம் கொடுத்த சில நிமிடங்களில்  8 மாடுகள் திடீரென மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

ஆம்பூர்: கம்பிக்கொல்லை பகுதியில் தகராறு செய்த போது பெண் கையை பிடித்து  இழுத்ததாக ஒருவர் கைது|Inshorts

இதில் இரண்டு மாடுகள்  காப்பாற்றப்பட்ட நிலையில் 6  கறவை மாடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழநதுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார் மற்றும் அங்கு பணி புரிந்தவர்கள் உடனடியாக நிலத்தின் உரிமையாளர் அஷ்பக் அஹமத் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை  பராமரிப்பு துறை மாவட்ட உதவி இயக்குனர் முரளி மற்றும் கால்நடை மருத்துவர் சங்கீதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கால்நடைகளை உடற்கூறாய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Insurance for cows: Farmers welcome Aavin's scheme!

ஆம்பூர் அருகே பண்ணை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கறவை மாடுகளுக்கு தீவனம் அளித்த அடுத்த சில நிமிடங்களில் அடுத்தடுத்து 6  கறவைமாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web