6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகர்ந்து உள்ளது. இதனுடன், தெற்கு அந்தமான் கடலின் மேல் செயல்படும் மேலடுக்கு சுழற்சியும் இணைந்து, வரும் 22-ந்தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த அமைப்பு தொடர்ந்து மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ந்தேதி தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், அதற்கடுத்து 48 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கமாக, இன்று தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் — செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, நீலகிரி, திருவள்ளூர் — மாலை 4 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மழை தொடரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
