வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

 

பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் மழை மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

21-02-2026 அன்று தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். புதுவை, காரைக்காலிலும் மழை இருக்கும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம். 22-02-2026 அன்று திண்டுக்கல், மதுரை, தேனி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பல இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசலாம்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

23 மற்றும் 24-02-2026 அன்று மாநிலத்தின் சில இடங்களில் லேசான மழை தொடரும். 25-02-2026 அன்று மிதமான மழை பெய்யலாம். 26-02-2026 அன்று தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை அதிகரிக்கலாம். இதர பகுதிகளில் லேசான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!