பிரபல தொழிலதிபர் மகன் ஓட்டிய லம்போர்கினி கார் விபத்து: 6 பேர் படுகாயம்!

 
லம்போர்கினி கார் விபத்து

பிரபல புகையிலை நிறுவன அதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா, தனது சொகுசு காரால் ஏற்படுத்திய விபத்து அப்பகுதி மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 3:15 மணியளவில் கான்பூர் நகரின் முக்கிய சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது: ஷிவம் மிஸ்ரா தனது லம்போர்கினி காரில் மிக அதிவேகமாகச் சென்றுள்ளார்.வேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார், முதலில் ஒரு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர், நிலைதடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த உடனே அங்கிருந்த மக்கள் ஒன்று கூடினர்: விபத்தை ஏற்படுத்திய ஷிவம் மிஸ்ரா தப்பி ஓட முயன்றபோது, ஆத்திரமடைந்த மக்கள் காரின் கண்ணாடியை உடைத்து அவரைத் தாக்க முயன்றனர்.

விபத்து

ஷிவம் மிஸ்ராவின் காருக்குப் பின்னால் மற்றொரு காரில் வந்து கொண்டிருந்த அவரது பவுன்சர்கள் (பாதுகாவலர்கள்), அவரை மக்களிடமிருந்து மீட்டுப் பாதுகாத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கான்பூர் காவல்துறையினர்: ஷிவம் மிஸ்ரா மதுபோதையில் இருந்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரைப் பறிமுதல் செய்துள்ளனர். காயமடைந்த 6 பேரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் விபத்து

கே.கே. மிஸ்ரா, வட இந்தியாவில் புகழ்பெற்ற புகையிலை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். அவரது மகன் இத்தகைய கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது தேசிய அளவில் செய்தியாகியுள்ளது. கடந்த காலங்களில் இதே போன்ற சொகுசு கார் விபத்துகள்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்தும் கூர்ந்து கவனிப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!