பாராமதி விமான விபத்தில் 6 பேர் பலி… விசாரணை தொடக்கம்!
பாராமதி விமான விபத்து தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணையை தொடங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த விமான பாகங்களை வைத்து முதற்கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது.
விமானம் எந்த வேகத்தில் வந்தது, எந்த திசையில் தரையிறங்க முயன்றது என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என்பதையும் விசாரணை குழு பரிசீலித்து வருகிறது.
முன்னதாக இன்று காலை மராட்டிய மாநிலம் பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயன்றபோது தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
