ராணுவ வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!
ஆப்கானிஸ்தான் எல்லையோரமாக உள்ள பாகிஸ்தான் பகுதிகளில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்புக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து ஆதரவு கிடைப்பதே காரணம் என பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை தலீபான்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாக்குதலுக்குப் பிறகு சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தொடரும் வன்முறை சம்பவங்கள் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
