என்கவுண்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் மாரேடுமில்லி வனப்பகுதியில், ரகசிய தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் இன்று (நவம்பர் 18) அதிகாலை 6.30 மணியளவில் மாவோயிஸ்டுகளை இலக்காகக் கொண்டு மாபெரும் சோதனை நடத்தினர். மறைவிடம் இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சூழ்நிலை பதற்றம் நிறைந்தது.

பாதுகாப்புப் படையினரின் பதிலடி நடவடிக்கையால் கடும் துப்பாக்கிச் சூடு உருவானதில், 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை உயர் அதிகாரி அமித் பர்தார் உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் நடந்த பகுதியை முழுமையாக முற்றுகையிட்டு, மேலும் பதுங்கியிருக்கக்கூடியோர் மீது தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.

இந்த சம்பவம் குறித்து பேசும் போது, 2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டிலுள்ள மாவோயிஸ்ட் இயக்கம் முழுமையாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த என்கவுண்டர், அந்த அறிவிப்பை நோக்கி முன்னேறும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
