பிப்ரவரி 28ல் வானில் ஆறு கிரகங்கள் அணிவகுப்பு… அரியக் காட்சி!
சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கிரகங்கள் பிப்ரவரி 28 அன்று வானில் ஒரே வரிசையில் தோன்றும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த அரிய நிகழ்வை நாடு முழுவதும் மக்கள் காணலாம் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் சில நேரங்களில் பூமியில் இருந்து பார்க்கும்போது ஒரே கோட்டில் இருப்பது போல தோன்றும். இதையே கிரக அணிவகுப்பு என அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் தொலைவில் இருப்பதால் தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வானம் தெளிவாக இருந்தால் இந்த அழகான காட்சியை காணலாம். வெள்ளி மிகவும் பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்படுகிறது.
கிரகங்களை கடற்கரை, மைதானம் அல்லது வீட்டு மாடியில் இருந்து எளிதாக பார்க்கலாம். செவ்வாய் இரவு 9 மணியளவில் தெரியும் என கூறப்படுகிறது. இதுபோன்ற கிரக அணிவகுப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியும் நடைபெறும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அரிய வானியல் நிகழ்வு வானத்தை ரசிக்க விரும்புபவர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக இருக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
