ஒரே நாளில் பள்ளி வளாகத்தில் 6 பாம்புகள்... மாணவர்கள் அதிர்ச்சி !

 
பாம்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பாம்புகள் அடிக்கடி சுற்றி திரிவதால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியின் பின்புறம் புதர்மண்டிய செடிகளும் குடியிருப்புகளும் அதிகமாக உள்ளன.

கட்டுவிரியன் பாம்பு

இதனால் சாரை, கட்டுவிரியன் உள்ளிட்ட பல வகை பாம்புகள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து வருகின்றன. நேற்று ஒரு சாரை பாம்பை பிடிக்க வந்த தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து 6 பாம்புகளை மீட்டனர். இதுவரை பள்ளி வளாகத்தில் இருந்து 16 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாரைப்பாம்பு பாம்பு

கழிவுநீர் பள்ளி மைதானத்துக்குள் வருவதும் பாம்புகள் அதிகரிக்க காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். புதர்களை அகற்றி கழிவுநீர் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பந்தலூர் அருகே தேவாலா பகுதியில் 12 அடி நீள ராஜநாகம் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!