ரயில் நிலையத்தில் பயங்கர தீவிபத்து … 600 பைக்குகள் தீயில் கருகி நாசம்!
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 6.30 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் நிலையத்தின் பின்புற நுழைவாயிலில் உள்ள பைக் பார்க்கிங் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. முதலில் இரண்டு பைக்குகளில் தொடங்கிய தீ, வேகமாக பரவி 600-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைச் சாம்பலாக்கியது.

தீ விபத்தில் இரண்டாவது கேட் அருகேயுள்ள டிக்கெட் கவுண்டரும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. அருகிலிருந்த மரங்களுக்கும் தீ பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. திருச்சூர் மற்றும் ஒல்லூரில் இருந்து வந்த தீயணைப்புப் படையினர் கடும் போராட்டத்துக்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விடுமுறை நாள் என்பதால் பயணிகள் குறைவாக இருந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மின்சார வாகனம் ஒன்று தீப்பிடித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் இருந்த எரிபொருள் காரணமாக தீ வேகமாகப் பரவியதாக கூறப்படுகிறது. தடயவியல் குழு ஆய்வு செய்யப்படும் என்றும், பெரிய வெடிப்பு தவிர்க்கப்பட்டது என்றும் அமைச்சர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
