6 கிமீ தூரம்.... 600 கார்களில் அணிவகுப்பு... மாஸ் காட்டிய முதலமைச்சர்!

 
சந்திரசேகரராவ்

திரைப்படத்தில் அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்தும் சீன் வரும் போது வரிசையாக அடுத்தடுத்து கார்களின் அணிவகுப்பு தொடரும். இந்த சினிமா சீனையே மிஞ்சும் அளவுக்கு சமீபத்தில் தெலங்கானா முதல்வர்  கே.சந்திரசேகர் ராவ் காரின் பின்னால் 600 கார்கள் அணிவகுத்து சென்றன. சந்திரசேகரராவ்   2  நாட்கள்  அரசு முறை பயணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் சாலை மார்க்கமாக பயணம் செய்த நிலையில்  அவருடைய ஆதரவாளர்கள் சுமார் 600 கார்களில் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.  இந்த காட்சி தெலுங்கு படத்தின் சீனையே மிஞ்சும் அளவுக்கு இருந்ததாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில்  கலாய்த்து வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் பாஜக அல்லாத மாற்று அணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் இந்தியா முழுவதும் ஒரே அணியில் திரண்டு வருகின்றன.

சந்திரசேகரராவ்

இதற்கான முயற்சிகளில் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில்  சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் சந்திப்பதற்காக சென்றார்.  இதே போல்  பீகார் மாநிலம் பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பாஜகவுக்கு எதிரான தேர்தல் வியூகத்தை வகுத்தது குறிப்பிடத்தக்கது.   டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பது  குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் அமைதி கலைத்தால் ஆம் ஆத்மி அடுத்து நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில்  பங்கேற்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அதேபோல மம்தா பானர்ஜி தலைமையில்  காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாயாவதி பங்கேற்கவில்லை.  இந்த கூட்டத்திற்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்த கட்டமாக உத்தவ் தாக்கரேவை, சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கிறார்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் கேசிஆரின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.  

காங்கிரஸ்

இந்நிலையில், நேற்று சந்திரசேகர் ராவ் பேருந்தில்  சுமார் 6 கி.மீ தூரம் வரை பயணம் செய்தார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் 600 கார்களில் ஆதரவாளர்கள் அணிவகுத்தனர்.  
இந்த பயணத்தில்  உள்ளூர் பெண்கள் கனமழையையும் பொருட்படுத்தாது சந்திரசேகர் ராவுக்கு ஆரத்தி எடுத்து மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர்.   கட்சி நிர்வாகிகளுடன் மதிய உணவு சாப்பிட்ட அவர், அங்கிருந்து சோலாப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அவரை பார்க்கவும், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இதற்காகதான் தெலங்கானா ராஷ்டிர சமிதி எனும் தன்னுடைய கட்சி பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றியுள்ளார். அதேபோல  வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் எனவும் கூறியிருந்தார்  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web