600 டன் ஐபோன்கள் அவசர அவசரமாக சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு!

 
போன்

அமெரிக்க அதிபராக 2வது முறை பதவியேற்று கொண்ட ட்ரம்ப் பல அதிரடி திடீர் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் சீன பொருட்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த அதிகப்படியான வரியை விதித்துள்ளார். இதனை தவிர்க்கும் முயற்சியாக, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவிற்கு விமானம் மூலம் அனுப்பி உள்ளது.

 போன்

சுமார் 600 டன் எடை கொண்ட ஐபோன்கள், சிறப்பு சரக்கு விமானங்களில் ஏற்றப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை சார்ந்த உற்பத்தியை குறைத்து, இந்தியாவிற்கு உற்பத்தியை மாற்றியதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரியை சமாளிக்கவும் இது உதவியது.

இந்த ஐபோன்கள், தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா உற்பத்தி நிறுவனங்கள் மூலம் ஆப்பிள் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் கையிருப்பு அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த பெரிய அளவிலான ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 125% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரி மட்டுமே விதிக்கப்பட்டது. இது தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த செயல்முறையை விரைவுபடுத்த, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், பொருட்களை அனுமதிப்பதற்கான நேரத்தை 30 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாகக் குறைக்க ஆப்பிள் நிறுவனம் கோரிக்கை வைத்தது. புதிய வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, சென்னையில் இருந்து குறைந்தது ஆறு சரக்கு விமானங்கள் ஐபோன்களை ஏற்றிச் சென்றுள்ளன. ஒவ்வொரு விமானமும் சுமார் 100 டன் எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடியது. 

 

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 220 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்கிறது. கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் தகவலின்படி, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களில் 20% தற்போது இந்தியாவில் இருந்து வருகிறது. மீதமுள்ளவை சீனாவிலிருந்து வருகின்றன. 

அதிகரித்துவரும் ஐபோன் தேவையை பூர்த்தி செய்ய, ஆப்பிள் நிறுவனம் இந்திய தொழிற்சாலைகளில் உற்பத்தியை 20% அதிகரிக்க இலக்கு நிர்ணயித்தது. இதற்காக சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் அதிக பணியாளர்களை நியமித்தும், வழக்கமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் உற்பத்தியை மேற்கொண்டு வந்ததால் 

போன்

கடந்த ஆண்டு 20 மில்லியன் ஐபோன்களை உற்பத்தி செய்த ஃபாக்ஸ்கான் நிறுவனம், தற்போது ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுகிறது என்பதை இரண்டு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர்களான ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஏற்கனவே 3 தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் தற்போது 2 தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

சீனாவை தவிர்த்து பிற நாடுகளுக்கும் உற்பத்தியை மாற்ற ஆப்பிள் நிறுவனம் முயற்சி செய்து வருவதால், இந்தியாவின் பங்கு ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விரைவான சுங்க அனுமதி அமைப்பை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் சுமார் எட்டு மாதங்கள் செலவிட்டுள்ளது இந்த ஏற்றுமதியில் பெரும்பாலானவை (85% க்கும் அதிகமானவை) சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட முக்கிய அமெரிக்க நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web