மலைவாழ் மக்களுக்கு 6000 நாற்றுகள், காய்கறி விதைகள்! ஐடி நிறுவன பெண் ஊழியர்கள் அசத்தல்!

 
ஐடி நிறுவன பெண் ஊழியர்கள் vdart

லட்ச லட்சமாக சம்பாதிக்கிறோம்... அடுத்தடுத்த மூன்று தலைமுறைக்கும் சொத்து சேர்க்க நம்ம வீட்டை விரிவுபடுத்தி இன்னும் சொகுசுகளைஅதிகரிக்கிறோம்  என்றில்லாமல் நாம கொஞ்சம் கிள்ளியாவது அடுத்தவருக்கும் கொடுப்போம் என்று களத்தில் இறங்கி இருக்கிறார்கள் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்.  இது அசத்தலான முயற்சி தான். அங்கொன்றும், இங்கொன்றுமாக சத்தமில்லாமல் இது போன்ற உதவிகளை ஐடி நிறுவன ஊழியர்கள் செய்து வந்தாலும், இவை பேசப்படும் போது.. பயன் தரும் போது.. பிரகாசமாக ஒரு தலைமுறை மக்கள் முன்னேறி .. இவர்களை ஆசீர்வதிக்கும் போது.. இப்படி உதவுகிற.. அரவணைக்கிற மனசுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

திருச்சி பச்சமலை பகுதியில் வாழும் 60 மலைவாழ் பெண்களுக்கு சுமார் 6000 இயற்கை நாற்றுகள், காய்கறி விதைகள், கீரை வகைகளின் நாற்றுகள் என வழங்கி வீ-டார்ட் மென்பொருள் நிறுவன பெண் ஊழியர்கள், அங்குள்ள நிலத்திலும் நட்டனர்.

மலைவாழ் ஐடி நிறுவன பெண் ஊழியர்கள் vdart

பச்சை மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் நிலப் பகுதிக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது சிரமமாகவே இருக்கும்.  இயற்கையான உணவுகளை அவர்கள் உட்கொள்ள வேண்டும் என்பதற்காக வெண்டை, கத்திரி, தக்காளி, மிளகாய், மூன்று வகையான கீரைகள் நாற்றாக, விதைகளை இம்முயற்சி மேற்கொண்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் நேரடியாக நிலத்தில் நட்டனர். மேலும் மலைவாழ் பெண்களுடன் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களும் வாழ்க்கை நடைமுறைகளைக் குறித்து  தெரிந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மலைவாழ் ஐடி நிறுவன பெண் ஊழியர்கள் vdart

60 மலைவாழ் பெண்களுக்கு, ஆளுக்கு தலா 100 வீதம் 6000 இயற்கை நாற்றுகள் பல்வேறு காய்கறி விதைகள் என VDart நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வழங்கினார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web