மே 4 மற்றும் 5ம் தேதிகளில் 6000 சிறப்பு பேருந்துகள்!! இப்பவே திட்டமிடுங்க!!

 
அரசு பேருந்து

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. மலையே சிவபெருமானாக கருதி பக்தர்கள் 17கிமீ மலையை வலம் வருவர். ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பு வாய்ந்தது என்ற போதிலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது.  அந்த வகையில் நடப்பாண்டில் சித்ரா பவுர்ணமி மே மாதத் தொடக்கத்திலேயே அதாவது மே 4ம் தேதி நள்ளிரவு தொடங்கி 5ம் தேதி வரை  உள்ளது.

அரசுப் பேருந்து

இதனால் தொடர்ந்து  2 நாட்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான  குடிநீர், கழிப்பிடம் , தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இப்போதே செய்யத் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 28ம் தேதியில் இருந்து விடப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வரக்கூடும். இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலைக்கு மே 4, 5 தேதிகளில் 6000 சிறப்பு பேருந்துகளை  பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, தாம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தர்மபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள்  இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பேருந்து

இது  குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்ட நிலையில்  கடந்த ஆண்டை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி விடுத்த செய்திக்குறிப்பில்  சித்ரா பவுர்ணமி இந்த ஆண்டு மாத தொடக்கத்தில் வருவதால் கோடை விடுமுறையில் உள்ள குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு  மே4ம் தேதி  பிற்பகல் முதலே திருவண்ணாமலையில் மக்கள் குவியத் தொடங்குவர். இதனால் 4ம் தேதி காலை முதலே தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள்  திருவண்ணாமலைக்கு இயக்கப்பட ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்லது. இதன் படி ஏப்ரல் 4 மற்றும் 5ம் தேதிகளில்  2 நாட்களும் சேர்த்து 6000பேருந்துகள் அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் மே தினம் 1ம் தேதியே  கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web