மளிகைக்கடை கதவை உடைத்து ரூ60,000 கொள்ளை!

 
மளிகைக்கடை
 

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே காவலப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன் சபரிநாதன் (35) மளிகை கடை நடத்துகிறார். இன்று காலை அவரது கடை கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டதை அவர் கவனித்தார்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

மர்ம நபர்கள் அதிகாலையில் கடை கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் அருகே உள்ள காளிதாஸ், சுப்பிரமணி ஆகியோரின் மளிகை கடைகளின் கதவுகளையும் மர்ம நபர்கள் உடைத்து முயன்றிருந்தனர். ஆனால், அந்தக் கடைகளில் பணம் இல்லாததால் திரும்பி சென்றனர். பொருட்கள் எதுவும் திருடப்பட்டதா என தற்போது தெரியவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து பழநி தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து, சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து 3 கடைகளிலும் கதவை உடைத்து கைவரிசை காட்டிய சம்பவம் பழநி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!