டெல்லியில் கடும் பனிமூட்டம்... 66 விமானங்கள் ரத்து!

 
விமானம்
 


தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்கள் முழுவதும் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவிலான பனிமூட்டம் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில், டெல்லியில் காற்று மாசுபாடும் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள், பயணிகள் எனப் பல்வேறு தரப்பினரும் மூச்சுவிட சிரமப்படுகின்றனர்.

Delhi weather

இந்தக் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரெயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பனிமூட்டம் மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லியில் இன்று மட்டும் 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் புறப்படுவதற்கான நேரமும் மாற்றியமைக்கப்பட்டு, கால தாமதமாக இயக்கப்படுகின்றன.

அதேபோல், டெல்லி வழியாகச் செல்லும் மற்றும் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய பல ரெயில்களும் குறித்த நேரத்திற்குப் புறப்பட முடியாமல் கால தாமதமாகச் சென்றன. இதனால் ரெயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பெரும் அவதிக்கு உள்ளாகினர். வானிலை சீராகும் வரை இந்தப் பாதிப்புகள் தொடர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!