அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மிதமான மழை....!

 
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.   குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பேய்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.  தற்ஓது  தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

கனமழை  மழை

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி   காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 27 வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

உ.பி கன மழை

 இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web