பிரியாணி சாப்பிட்டா 7லட்சம் கார் பரிசு... உணவகத்தில் முண்டியத்த மக்கள் வெள்ளம்... !

 
பிரியாணி

பிரியாணியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. பிறந்தநாள் விழாக்கள், திருமணம், பண்டிகைகள், எந்த ஸ்பெஷல் டின்னருக்கும் பிரியாணி இருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு ஹோட்டலில் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு அவர் ஒரு விலையுயர்ந்த காரை வென்றார். ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.  

 திருப்பதியில் ரோபோ என்ற தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு, பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் ஒன்றை வழங்கியது.

திருப்பதியில் உள்ள ரோபோ ஹோட்டல் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட அனைவருக்கும் லக்கி ட்ரா கூப்பன் வழங்கப்பட்டது. இதனால், ஓட்டலுக்கு வந்த அனைவருக்கும் கூப்பன்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டைக் கொண்டாடும் வகையில்,

உணவகங்கள், நகைக்கடைகள், துணிக்கடைகளில் வியாபாரத்தை பெருக்கவும், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவும் கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிடுவது வழக்கம் தான். அந்த வகையில் உணவகம் ஒன்றில் பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் ரோபோ என்ற தனியார் அசைவ உணவகம் ஒன்று  செயல்பட்டு வருகிறது. இதில்   செப்டம்பர்  2023ல் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.    இதனையடுத்து அந்த  உணவகத்தில் பிரியாணி சாப்பிட தினமும் மக்கள் முண்டியடிக்கத் தொடங்கினர்.  பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, ரூ.279 கொடுத்து பிரியாணியை சாப்பிட்ட 23000 க்கும் மேற்பட்டோர் டோக்கன்களை பெற்றுக்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஹோட்டல் தலைவர் பாரத் குமார் ரெட்டி மற்றும் அவரது மனைவி நீலிமா ஆகியோர் அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தினர். திருப்பதியைச் சேர்ந்த ராகுல் வெற்றி பெற்றார். அவருக்கு சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிசான் மேக்னட் கார் இலவசமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து ஓட்டல் அதிபர்களே ராகுலுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

 இதன்படி ஞாயிறு அன்று நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகி பாரத் குமார் மற்றும் அவரது மனைவி நீலிமா ஆகியோர் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.

அதன் பிறகு ராகுலை அழைத்து காரை அவரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ரோபோ ஹோட்டல் தலைவர் பாரத் குமார் ரெட்டி கூறியதாவது. ரோபோ ஹோட்டலில் தரமான உணவுகளை குறைந்த விலையில் வழங்குகிறோம். இதுபோன்ற புதுமையான திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடரும் என்று பரத் குமார் ரெட்டி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web