ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்சி!! கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!!

 
டெய்சி

விழுப்புரம் மாவட்டத்தில்  கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரின் மனைவி டெய்சி. டெய்சிக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அதே கிராமத்தில் வசித்து வரும் சத்துணவு பொறுப்பாளர்  எமிலிமேரி, 4 பவுன் நகையை வாங்கினார். ஆனால் சொன்னபடி  எமிலிமேரி வேலை வாங்கி தரவில்லை. இதனையடுத்து டெய்சி எமிலிமேரியிடம், வேலைக்காக தான் கொடுத்த நகையை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் எமிலிமேரி நகையையும் திருப்பி தரவில்லை. வேலையும் வாங்கி தரவில்லை. 

விழுப்புரம்
இதற்கிடையில் கடந்த டிசம்பரில்  டெய்சி தனது குழந்தைகளுடன்,  அங்கன்வாடி மையத்திற்கு நேரில் சென்று வேலை அல்லது நகையை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு எமிலிமேரி தன்னுடைய ஆதரவாளர்களுடன்  சேர்ந்து, டெய்சியை மானபங்கப்படுத்தி, அவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். அத்துடன்  கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் அதில் கோர்த்திருந்த 5 பவுன் நகைகளையும் பறித்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து, எமிலிமேரி மீது, கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் டெய்சி புகார் மனு அளித்தார். ஆனால் இதுவரை அந்த புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

போலீஸ்
இதனால் மனவிரக்தி அடைந்த டெய்சி அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி டெய்சி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன்  தீக்குளிக்க முயன்றார்.  டெய்சியுடன் அவரது குடும்பத்தினர் 7 பேரும்  திடீரென கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  காவல்துறையினர்  ஓடிவந்து, மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். அத்துடன்  7 பேர் மீதும் தண்ணீரை ஊற்றி, அனைவரையும் மீட்டு, விசாரணை நடத்தினர். இதனால்  கலெக்டர்  அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web