தமிழகத்தில் புதிதாக உருவாக போகும் 7 மாவட்டங்கள்... !

 
தமிழ்நாடு

இந்தியா முழுவதும் 1956ம் ஆண்டு  மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது  தமிழ்நாடு  உருவானது. அந்த சமயத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.  அவை  தற்போது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. கடந்த ஆட்சியில்  தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் தனியாக உருவாக்கப்பட்டன.  

தமிழ்நாடு


அப்போது மக்கள் தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மாவட்டங்களையும் தனியாக பிரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அது குறித்து நடத்தப்பட்ட பரிசீலணையில்  மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிதாக ஏழு மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. தஞ்சாவூரில்  இருந்து கும்பகோணம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாகவும், கடலூரிலிருந்து   விருத்தாசலம் தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்பட உள்ளன. அதே போல் கோயம்புத்தூரிலிருந்து  பொள்ளாச்சியும், தூத்துக்குடியில் இருந்து  கோவில்பட்டியும், திண்டுக்கலில் இருந்து   பழநியும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு


அதே போல்  திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையமும்  தனி மாவட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளன.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தனி மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. .

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web