தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள்... அரசாணை வெளியீடு!

 
தமிழக அரசு

தமிழ்நாடு அரசு 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் திட்டங்களை மக்களுக்கு உரிய வகையில் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, மக்கள் தொகை அடிப்படையில் ஏற்கனவே ஊராட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு


தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிவடையும் போது 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டம் சங்ககிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web