தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் மதிப்பில் 7 புதிய திட்டப் பணிகள்... கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!

 
 தூத்துக்குடியில் ரூ.99 இலட்சம் மதிப்பில் 7 புதிய திட்டப் பணிகள்... கனிமொழி எம்பி திறந்து வைத்தார்!
 

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் ஒருபகுதியாக. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.16 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினையும், சத்திரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், லெவிஞ்சிபுரம் பகுதியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், 

ஜார்ஜ் ரோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.14.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும், குரூஸ்புரம் மற்றும் அமுதா நகர் பகுதிகளில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் M.M.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.27 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்களையும் 

அமுதா நகர் பகுதியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் M.M.அப்துல்லா தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.13.50 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கட்டடத்தினையும் என மொத்தம் ரூ.99 இலட்சம் செலவில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அறிவியல் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களின் கோடை கால விடுமுறையை பயனுள்ள அறிவுப்பயணமாக மாற்றும் நோக்கத்தில், ஏனென்று கேள் எனும் தலைப்பில் நடைபெற்றுவரும் கோடை கால அறிவியல் பயிற்சி முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு, வினாடி வினாப் போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது