ஒரே மாதத்தில் 7 பேர் பலி... ​​கேரளாவில் ‘மூளையைத் தின்னும்’ அமீபாவால் பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு!

 
மூளையைத் தின்னும் அமீபா

கேரளாவில் நெய்க்லீரியா ஃபோலேரி எனப்படும் ‘மூளையைத் தின்னும் அமீபா’வால் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 7 பேர் பலியான சம்பவம் கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளிலும் பாதிப்பு உயரும் நிலையில் உள்ளது. 2023 நிபா வைரஸ் பரவலுக்கு பின்னர் அனைத்து மூளை காய்ச்சல் சம்பவங்களையும் பதிவுசெய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், 2024 முதல் அமீபிக் என்செபாலிடிஸ் நூற்றுக்கணக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளது. பெரும்பாலும் தேங்கியுள்ள அசுத்தமான நீரில் அமீபா வாழ்கிறது; அந்த நீர் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்தால் மூளை காய்ச்சல் ஏற்படுகிறது.

மூளையை உண்ணும் அமீபா

பாதிப்பு காரணமாக மரண எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. திருவனந்தபுரம் ஆனாடு பகுதியைச் சேர்ந்த வினயா (26) கடந்த 40 நாட்களாக நெடுமங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முன்னோடியன்று உயிரிழந்தார். இதனுடன் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 17 பேருக்கு மூளை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 8 மரணங்கள் பதிவானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் போல் காணப்படும் இந்த நோயின் அறிகுறிகள் 1 முதல் 9 நாட்களில் தலைவலி, வாந்தி, கழுத்து வலி என தீவிரமாகி, மூளை வீக்கம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றன.

அமீபா

சபரிமலை யாத்திரை முன்னிட்டு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கேரளா நோக்கிச் செல்லும் நிலையில், பம்பா ஆற்றில் நீராடும் போது மூக்கு, வாய் மூடிக்கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், இந்த நோய் கொரோனா போல ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது என்பதால் அச்சப்பட தேவையில்லை என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. சபரிமலைக்குச் சென்று திரும்பியவர்கள் 3 நாட்களுக்குள் காய்ச்சல், தலைசுற்றல், வாந்தி, உடல்வலி, கழுத்து இறுக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ பரிசோதனை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!