ஓட்டல் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி... ஆப்கானிஸ்தானில் பயங்கரம்!

 
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷார்-இ-நவ் பகுதியில் இயங்கி வந்த ஓட்டலில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த ஓட்டல் சீன முஸ்லிம்களுக்காக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த அப்துல் மஜீத் தனது மனைவியுடன் சேர்ந்து ஓட்டலை நடத்தி வந்தார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தபோது வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஓட்டல் உரிமையாளர் அப்துல் உள்பட பலர் சிக்கினர். இந்த சம்பவத்தில் சீனர் ஒருவர் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமையல் அறை அருகே குண்டு வெடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!