வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ஆவேசமாக இளைஞரை துரத்திய 7 தெருநாய்கள்… உசிரை கையில் பிடித்தபடி ஓடிய பரிதாபம்!

 
தெருநாய்கள்

 தினமும் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒரு சாலையில் நள்ளிரவில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்  ஒரு தனிமனிதர், சாலை நடுவே சரிந்து விழும் நிலையில், சுமார் 7 ஆவேசமான தெருநாய்களுடன் போராடும் சோகமான காட்சிகள் பதிவாகியுள்ளன.  இந்த சம்பவம்,  அந்த நேரத்துக்கு வந்த ஒரு காரால் தடுக்கப்பட்டது.


இந்த சம்பவம் ஒரு தனிமனிதரின் உயிருக்கு தெரு நாய்களால் எவ்வளவு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான உணர்ச்சிகரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  சாலையில் யாரும் இல்லாத நேரம், அந்த நபர் பை மற்றும் பேக்  மட்டுமே கொண்டு, பைத்தியக்காரமாக குரைத்துக் கொண்டிருந்த நாய்களிடம் இருந்து தன்னை காக்க முயற்சிக்கிறார். அந்த நபரை தெருநாய்கள் கூட்டமாக துரத்திய நிலையில் அவர் ஒரு பெல்டால் அதனை விரட்டியடித்தபடி ஓடிவிட்டார்.  நாய்களின் எண்ணிக்கையும் வன்முறையும் அதிகரிக்க, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  
சற்று நேரத்தில் நாய்கள் மேல் பாய முயற்சிக்கின்றன.

நாய்

உயிர் உண்டோ இல்லையோ என்ற பயத்தில் அவர் மீண்டும் எழுந்து போராடுகிறார். அதே சமயத்தில்  திடீரென ஒரு கார் ஹெட்லைட்டுடன் அந்த இடத்திற்கு வந்தது. ஒளி மற்றும் சத்தம் கேட்டவுடன் நாய்கள் பயந்து ஓட்டம் பிடிக்கின்றன.  கார் ஓட்டுநர் காரை நிறுத்தி அந்த நபரிடம் நலமா என கேட்கிறார். அந்த நபர் சுவாசம் பிடித்தபடியே தலையசைத்து நன்றாக இருக்கிறேன் என கூறிவிடுகிறார்.  
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இது நகரங்களில் அதிகரித்து வரும் தெருநாய் தாக்குதல்களின் மீதான கவனத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.  மனிதர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில்  நடமாடும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் இந்த வீடியோவை பார்த்து கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது