பகீர்.. தொழிற்சாலையில் மூச்சுத் திணறி 7 பேர் பலி! கதறி துடித்த உறவினர்கள்!

 
எண்ணெய் தொழிற்சாலை

ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடா மாவட்டத்தில் அமைந்துள்ள  அம்பட்டி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் திடீரென உயிரிழந்தனர்.  நேற்று பிப்ரவரி 8ம் தேதி புதன்கிழமை வழக்கம் போல் எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்த நிலையில் விஷவாயு வெளியேறியதால் மூச்சு திணறி 7 பேர் பலியாகினர்.

எண்ணெய் தொழிற்சாலை

நேற்று காலை 7 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது  சில தொழிலாளர்கள் தவறி விழுந்ததாகவும்,  மேலும் சில பேர் அவர்களை காப்பாற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, இறந்தவர்களில் ஐந்து பேர் படேருவைச் சேர்ந்தவர்கள், மற்ற இருவரும் பெத்தபுரம் மண்டலத்தைச் சேர்ந்த புலிமேருவைச் சேர்ந்தவர்கள். தொழிலாளர்கள் கிருஷ்ணா, நரசிம்மா, சாகர், பஞ்சுபாபு, ராமராவ், கட்டாமுரி ஜெகதீஷ் மற்றும் யெல்லமில்லி பிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்தத் தொழிற்சாலை கடந்த  ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது பலியானவர்கள் 10 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களின்  உறவினர்கள் கதறி துடித்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்தது.  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு பலியானவர்கள் மற்றும்  படுகாயம் அடைந்தவர்கள் சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

எண்ணெய் தொழிற்சாலை

இச்சம்பவம் குறித்து ஆந்திர தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் அச்சன்நாயுடு  எண்ணெய் தொழிற்சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தது பெரும் கவலையை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அரசின் தோல்வியால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது எனக் கூறியுள்ளார். அத்துடன்  இச்சம்பவம் குறித்து அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்கு அரசு சிறந்த சிகிச்சை அளித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web