இந்தியாவில் 7 உலகத் தலைவர்கள் ... விமான நிலையத்தில் வரவேற்ற மோடி!

 
மோடி
 

23வது இந்திய–ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நேற்று மாலை தில்லி வந்தார். வழக்கமான நடைமுறையை மாற்றி, பிரதமர் மோடி நேராக விமான நிலையத்துக்கு சென்று புதினை ஆரத்தழுவி வரவேற்றது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பின்னர் இருவரும் ஒரே காரில் பயணித்த காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.

புதினுக்கு நேற்று இரவு தனது இல்லத்தில் இரவு விருந்து வழங்கிய பிரதமர் மோடி, இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் அவருடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். மோடி பதவியேற்று 11 ஆண்டுகளாகும் நிலையில், இதுவரை உலகின் 6 தலைவர்களுக்கு மட்டுமே அவர் விமான நிலைய வரவேற்பை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் பராக் ஒபாமா, ஷேக் ஹசீனா, ஷின்சோ அபே, டொனால்ட் டிரம்ப், முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோர் அடங்குவர்.

அதே சமயம், அமெரிக்கா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை நேரில் வரவேற்றிருந்த மோடி, 2019ல் மாமல்லபுரம் வந்தபோது சீனா அதிபர் ஷி ஜின்பிங்கை மட்டும் விமான நிலையத்தில் வரவேற்காதது அப்போது பெரிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. மாமல்லபுரம் சந்திப்புக்காக அவர் அங்கு முன்கூட்டியே சென்றிருந்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்தது என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!