7 வயது சிறுவன் கொலை... போலீசை தாக்கி தப்ப முயற்சித்த மாமனுக்கு 'துப்பாக்கிச் சூடு'!

 
சர்வேஷ் சர்வேஷ்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில், உல்லாச வாழ்க்கைக்குப் பணம் தராத ஆத்திரத்தில் 7 வயது மைத்துனரைக் கொடூரமாகக் கொலை செய்த நபரைப் போலீசார் காலில் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாதிகி மண்டலம் கொனுப்பலபாடு கிராமத்தைச் சேர்ந்த போய கோவிந்து - லட்சுமி தம்பதியினரின் மகன் ஹேமசந்திரா (7). தனியார் பள்ளியில் யு.கே.ஜி (UKG) படித்து வந்த இந்தச் சிறுவன், கடந்த 25ம் தேதி மாயமான நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

ஆம்புலன்ஸ்

லலிதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்த சர்வேஷ், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுத் தனது மனைவி மற்றும் மாமியாரிடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். அவர்கள் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சர்வேஷ், பழிவாங்கத் திட்டமிட்டுப் பள்ளிக்குச் சென்ற சிறுவன் ஹேமசந்திராவைத் தனது பைக்கில் கடத்திச் சென்றார். மலையடிவாரத்தில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று, சிறுவனைத் தலையில் கல்லால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடலைப் பாறைகளுக்கு இடையே மறைத்து வைத்துள்ளார். எதுவுமே தெரியாதது போல் சிறுவனைத் தேடுவது போல நாடகமாடிய சர்வேஷை, சிசிடிவி (CCTV) காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அதிரடியாகத் தூக்கினர்.

கொலை செய்யப்பட்ட இடத்திற்குச் சடலத்தை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றபோது, சர்வேஷ் திடீரென அங்கிருந்த பீர் பாட்டிலால் இன்ஸ்பெக்டர் ராமசுப்பையா மற்றும் ஒரு போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர், தற்காப்பிற்காகத் தனது கைத்துப்பாக்கியால் சர்வேஷின் காலில் சுட்டார். இதில் நிலைதடுமாறி விழுந்த கொலையாளியைப் போலீசார் 100 சதவீதம் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தற்போது காயமடைந்த போலீசார் மற்றும் கொலையாளி சர்வேஷ் ஆகிய 3 பேரும் தாடிபத்ரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சொந்த மாமனே பணத்திற்காகச் சிறுவனைக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!