பெற்றோர்களே உஷார்... வருஷத்துக்கு ரூ.70 லட்சம் சம்பளம், பங்களா, கார்.... ஆன்லைன் திருமண மையம் மூலம் பெண்களை ஏமாற்றிய இளைஞர்!

 
பெண்

டெல்லி கேசவபுரத்தில் இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தபெண், குருகிராமில் உள்ள எம்என்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அவருக்கு திருமணம் முடிக்க பெற்றோர் வரன் தேடினர். அதன்படி ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து, ப்ரோபைல்களில் தேடி வந்துள்ளனர்.

அதில் ஒருவர், தான் ஒரு எஃச்.ஆர் ஊழியர் எனவும், ஆண்டுக்கு ரூ.50-70 லட்சம் வரை வருமானம் வாங்குவதாகவும் கூறி தனது ப்ரோபைலை பதிவிட்டுள்ளார். அதை பார்த்ததும் பிடித்துப் போய் அவரது ப்ரோபைலுக்கு பெண் வீட்டார் ரெக்வஸ்ட் கொடுத்து பேசத் தொடங்கியுள்ளனர். அதன்பின்னர் இளம்பெண்ணும்- அந்த பணக்கார மாப்பிள்ளையும் பேசத் தொடங்கினர். 

பெண்

தன்னிடம் விலை உயர்ந்த கார் இருக்கிறது, சொகுசு பங்களாக்களில் வசிக்கிறேன் என போட்டோக்களையும், வீடியோக்களையும் அனுப்பி அந்த பெண்ணை கவர்ந்துள்ளார். இதன்மூலம் பெண் மற்றும் அவரது குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்றுள்ளார். 

கிட்டதட்ட திருமணம் உறுதியான நிலையில் இருவரும் அடிக்கடி பேசி நெருங்கி பழக ஆரம்பித்தனர். அப்போது உங்களுக்கு மலிவு விலையில் ஐபோன் மேக்ஸ் ப்ரோ வாங்கித் தருகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.3.05 லட்சம் பணத்தை அந்த நபருக்கு பெண் வீட்டார் அனுப்பியுள்ளனர். பணம் கிடைத்த கையுடன் அந்த நபர் பெண்ணை சமூக வலைத்தளங்களில் பிளாக் செய்துவிட்டார்.

மேலும், தனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என அவர் பெண் வீட்டாரிடம் கூறியுள்ளார். பதறிப்போய் சந்தேகமடைந்த பெண் வீட்டார் போலீசாரிடம் புகார் அளிக்கவே, அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் பணக்கார வேசம் எல்லாம் மோசடி என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபரையும் மடிக்கிபிடித்தனர். 

பெண்

விசாரணையில் அவர் உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரை சேர்ந்த விஷால் என்பது தெரியவந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பின்னர் இதுபோன்ற திருமண வரன் இணையதளத்தில் தனது போலி ப்ரோபைலை பதிவேற்றம் செய்து மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இவரிடம் வேறு பலர் ஏமர்ந்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறது. மேலும், இவரது வங்கிக்கணக்கையும் தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web