700 காளைகள்... அத்தனை ஆவேசம்... இளைஞரைக் குத்தி கிழித்து சிலிர்த்து திமிறிய காளை! ஜல்லிக்கட்டில் பரபரப்பு!

 
ஜல்லிக்கட்டு

பொங்கல் திருநாளையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன் படி இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது.
 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர்  மெர்சி ரம்யா தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்க காத்திருக்கின்றனர்.

ஜல்லிக்கட்டு மாடுகள்

முதன் முதலில் அடைக்கல மாதா கோயில் மாடு மற்றும் மலைக்கோயில் முருகன் மாடு இரண்டும் அவிழ்த்து விடப்பட்டன.ஒரு சுற்றுக்கு 30 வீரர்கள் என 10 சுற்றுகளாக போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜல்லிக்கட்டு

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றில் களம் கண்ட திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த மாடுபிடிவீரர் பிளோமின்ராஜ் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இவருக்கு வயது 24. இவரது  தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதன் பிறகு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில்  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web