தமிழக காங்கிரஸில் 71 மாவட்ட தலைவர்கள் நியமனம்... சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பு !
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் இன்று (19.01.26) நியமனம் செய்யப்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. பல மாதங்கள் நீண்ட இழுபறிக்குப் பிறகு, தலைமை தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது.
Hon'ble Congress President has approved the proposal for the appointment of Presidents of the District Congress Committees of Tamil Nadu, as enclosed, with immediate effect. pic.twitter.com/Pgld0yEVMg
— INC Sandesh (@INCSandesh) January 18, 2026
வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, சீட் பேரம் மற்றும் உள்கட்சி ஆயத்தம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இதனை முன்னிட்டு தீவிர ஆயத்தம் செய்யும் நிலையில், டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனையில், கூட்டணி யாருடன் என்பதும், உள்கட்சி விவகாரமும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனை முடிந்த பின்னர், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து, கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சியினர் கட்டுப்படுவார்கள் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், புதிய மாவட்ட தலைவர்களின் நியமனம், செல்வப்பெருந்தகைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் மாற்றப்பட்டுள்ளதோடு, கட்சியில் பரபரப்பு நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
