ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் கொன்று குவிப்பு!! உக்ரைனில் கோர தாண்டவம்!!

 
உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் இல்லை என அரசியல் வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன. இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக  அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.

உக்ரைன்

மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருவதால் சமாளித்து வருகிறது. இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகள் உக்ரைனைக்கு ஆயுத உதவி வழங்கி வருவதால் உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என கருத்து தெரிவித்திருந்தார். 
இதில் உக்ரைனுக்கு ஆதரவாக  அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் நவீன ஆயுதங்களை சப்ளை செய்து வருகின்றன. இதனால் உக்ரைன் படைகள் ரஷ்ய தாக்குதலை முறியடித்து தொடர்ந்து  முன்னேறி வருகின்றன.

உக்ரைன்

இந்த போரில் 2 நாட்டு வீரர்களும் பலியாகி வருகின்றனர். சிலர் சிறைப்பிடிக்கப்பட்டும், சிலர் அதில் விடுவிக்கப்பட்டும் தினசரி தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் பாக்முட் நகரப் பகுதியில் ரஷ்ய வீரர்களின் உடல்கள் குவிந்து கிடக்கின்றன. உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் சோலேடார்.இந்த பகுதியில் இருநாட்டு வீரர்களிடையே நடைபெற்ற மோதலில்  ரஷ்ய வீரர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 710 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,12,470 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web