வீட்டிலேயே 73% உயிரிழப்பு… உண்மை காரணம் கண்டறிய மாநிலம் முழுவதும் ஆய்வு!

 
இறப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் 6.96 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகின்றன. இதில் 23 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் உயிரிழக்கின்றனர். ஆனால் 73 சதவீதம் உயிரிழப்புகள் வீடுகளிலேயே நடைபெறுகின்றன. இதனால் இறப்புக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க பொது சுகாதாரத் துறை விரிவான ஆய்வை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2023ம் ஆண்டு வீடுகளில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ‘வயது மூப்பு’ என மட்டும் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் குறித்து நேரில் சென்று விசாரிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து நடந்த ஆய்வில் 98 சதவீதம் இறப்புகளுக்கான உண்மை காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் பேர் இதய நோயாலும், 7 சதவீதம் பேர் நீரிழிவு உள்ளிட்ட நோய்களாலும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டமாக பெரம்பலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆய்வு நடைபெற உள்ளது. பின்னர் மாநிலம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும். இனி வீடுகளில் உயிரிழந்தாலும், மருத்துவர் மூலம் காரணம் உறுதி செய்து சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துல்லியமான புள்ளிவிபரங்கள் இருந்தால் தான் நோய் தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!