9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75% வருகை பதிவு கட்டாயம்!! அதிரடி கட்டுப்பாடுகள்!!

 
மாணவிகள்

தமிழகத்தில் 10, 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள்  நடைபெற்று முடிந்துள்ளன. இதில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை  தெரிவித்துள்ளது. தற்போது 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்த் பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பள்ளிகல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 9 ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் 10ம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சற்று குறைகிறது. இதனால்  9ம் வகுப்பில் மாணவர்களை தேர்ச்சி செய்வதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

மாணவிகள்
அதன்படி 9 மாணவன்  ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சமாக 25 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  
அனைத்து பாடங்களிலும்  உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து குறைந்தது 150 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
 75%க்கும் அதிகமான வருகைப்பதிவு இருக்க வேண்டும் . 
 9 ம் வகுப்பில் படிக்கும் மாணவர் இறுதி தேர்வில் ஒரு பாடத்திலோ அல்லது அனைத்து பாடத் தேர்விற்கோ வராதவர்கள்  மருத்துவ சான்றிதழ் ஒப்படைக்க வேண்டும். 
மருத்துவ சான்றிதழ் தரும் மாணவர்களின் காலாண்டு அல்லது அரையாண்டு மதிப்பெண்ணை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  இந்த விதிகளுக்கு உட்படாத மாணவர்களின் தேர்ச்சி குறித்த முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர்  மூலம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web