கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக 750 கிலோ கேக்! களை கட்டிய கேக் மிக்ஸிங் திருவிழா!

 
கேக் மிக்சிங் திருவிழா

உலகம் முழுவதுமே கிறிஸ்துமஸ் மாதத்தைக் கொண்டாட தயாராகி வருகிறார்கள். இந்த வருட கிறிஸ்துமஸ் பலரது வாழ்வில் திருப்பங்களைத் தர எல்லாம் வல்ல ஆண்டவர் அருள் புரிவாராக. யேசு கிறிஸ்துவை வரவேற்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.  

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கேக்குகளை தயாரிக்கும் பணிகளும் மும்மூரம் அடைந்துள்ளது. 15 முதல் 20 நாட்களுக்கு முன்னதாகவே கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கேக் மிக்சிங் திருவிழா

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலை ஊஞ்சவளம்பட்டியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் அத்திப்பழம், பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, பேரிட்சை உட்பட 13 வகையான உலர் பழங்கள் மற்றும் உயர்ரக பழச்சாறுகளைக் கொண்டு கேக் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ் சில சுவாரசிய தகவல்கள்!
இதற்காக  அந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தது தான் விழாவின் சிறப்பு. தங்களது வாடிக்கையாளர்களை கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பியவர்கள், வாடிக்கையாளர்களை கேக் மிக்ஸிங் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்திருந்தனர்.

கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடல் பாடிக் கொண்டே  உலர் பழங்களின் மீது பழச்சாரை ஊற்றினர். இதனை அடுத்த பத்து, பதினைந்து நாட்களுக்கு பதப்படுத்தி வைப்பர்.  கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக இதற்கான மாவுகளை சேர்த்து  750 கிலோ பிளம் கேக் தயாரிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த வகையில் தான் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படுவதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web