மீனவ குடும்பங்களுக்கு ரூ7500/- நிவாரணத் தொகை.. முதல்வர் அதிரடி..!

 
படகு ஸ்டாலின்

தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதில் சென்னையில் உருவான பெருவெள்ளத்தில்  சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்தில் இருந்த எண்ணெய் கலந்து விட்டது.  இதனால் வடசென்னை பகுதிகளான  காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி.நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர்   என கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.

படகு ஸ்டாலின்


இதனால் இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால்  9,001 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர்  ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   ”  எண்ணெய் கசிவினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட  2,301 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.12,500  வழங்கப்படும்.  அதே போல்  எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்ய  படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000  வழங்கப்படும்.  

ஸ்டாலின் படகு

இந்நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக  வரவு வைக்கப்பட்டு வருகிறது.இதுதவிர   சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7  பகுதிகளில் எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500  நிவாரணத் தொகையாக  வழங்கப்படும். இந்நிவாரணத் தொகை  பாதிக்கப்பட்ட குடும்பங்களின்  வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web