தமிழகம் முழுவதும் 75,000 மையங்களில் இன்று 2வது நாளாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

 
வரைவு வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள இன்று (டிசம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாகச் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 75,000 வாக்குச்சாவடி மையங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. நேற்று (டிசம்பர் 27) தொடங்கிய முதற்கட்ட முகாமின் தொடர்ச்சியாக இன்றும் மக்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர்

சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 66 லட்சம் பேர் இடம் மாறிச் சென்றவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டவர்கள் அல்லது புதிய வாக்காளர்கள் (ஜனவரி 1, 2026 அன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள்) தங்களை இணைத்துக் கொள்ள இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

தேவையான படிவங்கள்: படிவம் 6: புதிய வாக்காளராகப் பெயர் சேர்க்க. படிவம் 6B: ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க. படிவம் 7: பெயர் நீக்கம் செய்ய. படிவம் 8: முகவரி மாற்றம் அல்லது திருத்தங்கள் செய்ய. அடுத்தகட்ட முகாம்கள்:

வாக்காளர் தேர்தல் வாக்குப்பதிவு

டிசம்பர் மாத முகாம்களைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன: ஜனவரி 3, 2026 (சனிக்கிழமை), ஜனவரி 4, 2026 (ஞாயிற்றுக்கிழமை)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க ஜனவரி 18, 2026 கடைசி நாளாகும். பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி நேரடியாகவோ அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் 'Voter Helpline' செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!