கோவாவில் 77 அடி ராமர் சிலை ... நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு!
தெற்கு கோவாவின் கனகோனாவில் அமைந்துள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில், இந்தியாவின் மிக உயரமான 77 அடி வெண்கல ராமர் சிலை நாளை பிராண பிரதிஷ்டையுடன் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்கப்படுகிறது. இதற்கான பூஜைகள் இன்று காலை தொடங்கியவுடன் மடத்திலும் சுற்றுப்புறத்திலும் ஆன்மீகச் சூழல் கலைந்து கிடக்கிறது.
நாளை பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடி சிலையை திறந்து வைக்க உள்ளதால், மட வளாகத்தில் சிறப்பு ஹெலிபேட் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குஜராத்தில் ஒற்றுமைச் சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் இந்த ராமர் சிலையையும் உருவாக்கியுள்ளதாக கோவா பொதுப்பணித் துறை மந்திரி திகம்பர் காமத் தெரிவித்தார். இது உலகின் மிக உயரமான ராமர் சிலையாக அமையும் எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

விழாவில் கோவா கவர்னர் அசோக் கஜபதி ராஜு, முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், மத்திய மந்திரி ஸ்ரீபத் நாயக் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாட்டின் கவனம் கோவா நோக்கித் திரும்பியுள்ள நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம் பெரும் ஆரவாரத்துடன் நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
