தமிழகத்தில் 77 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்பு... கணக்கீட்டுப் படிவம் திரும்ப வராததால் நடவடிக்கை!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) நடைபெற்று வரும் நிலையில், சுமார் 77.52 லட்சம் வாக்காளர்களின் (12.09%) கணக்கீட்டுப் படிவங்கள் இதுவரை திரும்ப வரவில்லை என்ற புள்ளிவிவரத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த 2025 ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கான கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 77.52 லட்சம் படிவங்கள் திரும்ப வரவில்லை.

இதற்கு முக்கியக் காரணங்களாகத் தேர்தல் ஆணையம் கருதுபவை: உயிரிழந்தவர்கள்: 25,72,871 வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள்/இரட்டைப் பதிவு: 39,27,973 வாக்காளர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள்: 8,95,213 வாக்காளர்கள்
கணக்கீட்டுப் படிவங்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதியுடன் முடியவிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகும் கணக்கீட்டுப் படிவங்கள் திரும்ப வரவில்லை என்றால், இந்த 77.52 லட்சம் வாக்காளர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

வரும் டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் பின்னர், விடுபட்ட வாக்காளர்கள் புதிதாகத் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
