தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பில் 8 CRPF கமாண்டோக்கள்... மத்திய உள்துறை அமைச்சகம் !

தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகன் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடித்து வருகிறார். தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் ஒய் பிரிவு பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.
தற்போது வெளிநாட்டில் இருந்து பவுன்சர்களை வரவழைத்து பொது நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் அவரது பாதுகாப்பு குறித்து பரிசீலித்த மத்திய அரசு அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க அனுமதி அளித்துள்ளது.அதன்படி தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைவருமான சி. ஜோசப் விஜய்யின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) விஐபி பாதுகாப்புப் பிரிவு ஏற்றுக்கொண்டதாக செவ்வாய்க்கிழமை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிப்ரவரியில் விஜய் Y-பிரிவு ஆயுதப் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது. சிஆர்பிஎஃப் விஐபி பாதுகாப்புப் பிரிவு சமீபத்தில் இந்தக் கடமையை ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்புப் பிரிவின் ஒரு பகுதியாக, 50 வயதான அவர் தமிழ்நாட்டில் பயணம் செய்யும் போதெல்லாம் ஏழு முதல் எட்டு ஆயுதம் ஏந்திய CRPF கமாண்டோக்களைக் கொண்டிருப்பார் எனக் கூறியுள்ளது. விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!