ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் பலி... பெரும் சோகம்...
அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தில், சாய்ராங்–புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகளின் கூட்டத்துடன் மோதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் ஒரு யானை படுகாயமடைந்தது.

அதிகாலை 2.17 மணியளவில் சாங்ஜுராய் பகுதியில் ரயில் சென்றபோது திடீரென யானைகள் பாதையை கடந்ததாக கூறப்படுகிறது. மோதலின் வேகத்தில் ரயிலின் எஞ்சின் உட்பட 5 பெட்டிகள் தடம் புரண்டன. இருப்பினும், ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது நிம்மதியை அளித்துள்ளது.

விபத்து நடந்த உடனே வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. வனப்பகுதிகளில் ரயில் செல்லும் போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
