ரயில் மோதி 8 யானைகள் பலி... மத்திய அரசு அதிரடி உத்தரவு!
அசாம் மாநிலத்தில் ரயில் மோதி 8 யானைகள் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சுந்தரவனப் பகுதியில் நடைபெற்ற யானைகள் மற்றும் புலிகள் பாதுகாப்புத் திட்டக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் இது குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், "அசாமில் 8 யானைகள் பலியானது மிகவும் வருத்தத்திற்குரியது. இது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, ரயில்வே பாதைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு அந்தந்த மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், ரயில்வே அதிகாரிகளும் வனத்துறையினரும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், யானைகள் நடமாடும் பகுதிகளைக் கண்டறிந்து ரயில்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. காட்டின் ராஜாக்களாகக் கருதப்படும் யானைகள், மனிதர்களின் அலட்சியத்தால் தண்டவாளங்களில் பலியாவதைத் தடுக்க மத்திய அரசு இந்தத் தீவிரமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
