பயணிகள் கடும் அவதி... 8 விமான சேவைகள் ரத்து..!

 
விமானங்கள்
 


 

 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி  நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து, ஒட்டுமொத்த விமான போக்குவரத்துத் துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  அதன்பிறகு விமானங்கள் கூடுதல் கவனத்துடன் கையாளப்பட்டு வருகின்றன. சிறிய கோளாறுகள் இருந்தாலும் முழுமையாக சரிசெய்யப்பட்டப் பின்னரே விமானங்கள் இயக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனால் விமானங்கள் தாமதமாக புறப்படுவது, முழுமையாக ரத்து செய்யப்படுவது என தொடர்கதையாகி வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

 
அந்தவகையில்  இன்று ஒரே நாளில் 8 ஏர் இந்தியா விமான சேவைகள்  4 உள்நாட்டு விமான சேவைகளும், 4 வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து என செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி,  1. இரவு 7.10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம்,  2. சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு, மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3. காலை 9.45 மணிக்கு டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், 4. காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் ஆகியவை  ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 விமானம் விமான நிலையம்
 இதேபோல் 5. தூத்துக்குடியில் இருந்து பகல் 1.45 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், 6. இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம்,  7. டெல்லியில் இருந்து காலை 9.05 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து மற்றும் 8. ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  விமானங்கள் ரத்துக்கு இதுவரை முறையாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது