ஆசனவாய்க்குள் 8 அங்குல நீள வெடிகுண்டு… மருத்துவமனையில் பரபரப்பு!

 
வெடிகுண்டு
 

பிரான்சில் 24 வயது இளைஞர் ஒருவர் தனது ஆசனவாய்க்குள் 8 அங்குல நீளமுள்ள முதலாம் உலகப்போர் காலத்து வெடிகுண்டை வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1918ஆம் ஆண்டு ஜெர்மனி பயன்படுத்திய 37 மில்லிமீட்டர் பீரங்கி குண்டு அது என தெரியவந்தது. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சத்தால் துலூஸ் நகரில் உள்ள மருத்துவமனையின் ஒரு பகுதி உடனடியாக காலி செய்யப்பட்டது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். தீவிர ஆய்வுக்குப் பிறகு அந்த குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார். தடை செய்யப்பட்ட வெடிபொருளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், முதலாம் உலகப்போருடன் தொடர்புடைய மற்றொரு சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 1916ஆம் ஆண்டு போருக்கு சென்ற இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் எழுதிய கடிதங்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன. அந்த கடிதங்கள் தற்போது வீரர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரே போர்க்காலத்தைச் சேர்ந்த இரண்டு பொருட்கள் மீண்டும் வெளிவந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!