8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!

 
ஐபிஎஸ்
தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார். அதில் “குடிமைப் பொருள் துறை டிஜிபி சீமா அகர்வால் தீயணைப்புத் துறை டிஜிபியாக நியமனம். சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

 ஐபிஎஸ்
குடிமைப் பொருள் துறை ஐஜியாக இருந்த ரூபேஷ்குமார் மீனா, அதே துறையின் டிஜிபியாக நியமனம். ஐபிஎஸ் அதிகாரி கபில் குமார் ஷரத்கர் சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம், ஊழல் கண்காணிப்புத் துறை ஐஜி சந்தோஷ் குமரர் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம். 

ஐபிஎஸ்

சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜி ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத் துறை ஐஜியாக பணியிடமாற்றம், சென்னை பொருளாதார குற்றப் பிரிவு ஐஜி சத்யப்ரியா காவலர் நலன்பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவலர் நலன்பிரிவு டிஐஜி எம்.துரை காவல் துறை தலைமையக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web