தமிழகம் முழுவதும் +2 செய்முறைத் தேர்வு தொடங்கியது - 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

 
செய்முறை தேர்வு

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) மாணவர்களுக்கான பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுகள் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  மார்ச் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்வின் ஒரு பகுதியாக, இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நேற்று பிப்ரவரி 9ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெற உள்ளன. ஒரு நாளைக்கு மூன்று பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல் பிரிவு: காலை 9:00 - 11:00 மணி. இரண்டாம் பிரிவு: காலை 11:30 - மதியம் 1:30 மணி. மூன்றாம் பிரிவு: மதியம் 2:30 - மாலை 4:30 மணி

செய்முறை தேர்வு

தமிழகம் முழுவதும் சுமார் 4,221 தேர்வு மையங்களில், மொத்தம் 7,99,892 மாணவ - மாணவிகளும், சுமார் 26,000-க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் இந்தச் செய்முறைத் தேர்வில் பங்கேற்று வருகின்றனர். தேர்வுகளில் எவ்வித முறைகேடுகளும் நடக்காமல் இருக்கப் பள்ளிக் கல்வித்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது:

அந்தந்தப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பதிலாக, பிற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாகவும், அக மதிப்பீட்டாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தேர்வு மையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆய்வுக்கூடம் பரிசோதனை ரசாயணம் லேப் லேபாரட்டரி

செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றைய தினமே மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 1 அரியர் (Arrear): பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 16 முதல் 21 வரை நடைபெறவுள்ளன.

எஸ்.எஸ்.எல்.சி (SSLC) மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23 முதல் 28 வரை நடைபெறும். 12ம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் மார்ச் 2, 2026 அன்று தொடங்கி மார்ச் 26 அன்று முடிவடைகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!